தமிழ்நாடு

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

22nd Sep 2022 07:53 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகின்றது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | சூடுபிடிக்கும் காங். தலைவர் தேர்தல் களம்: நாளை மறுநாள் வேட்புமனு தொடக்கம்

மேலும், எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடக்கும் பல்வேறு இடங்களில் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளதால், மத்திய ஆயுதப் படையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அமைப்பின் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT