தமிழ்நாடு

புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பியது எப்படி?

22nd Sep 2022 12:22 PM

ADVERTISEMENT


தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், ரயிலில் அடிபட்டு இறந்ததாக அடையாளம் காணப்பட்டு, மகன் இறுதிச் சடங்குகள் செய்து உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் உயிருடன் திரும்பியது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில், வீட்டை விட்டு வெளியே சென்ற தாய் சந்திரா, ரயிலில் அடிபட்டு இறந்ததாக தகவல் கிடைத்து ஓடி வந்து பார்த்த மகன், அங்கிருந்த உடல் தனது தாயுடையதுதான் என்று அடையாளம் காட்டினார்.

இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..

பிறகு, வழக்கமான நடைமுறைகள் முடிந்து, உடல் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. மகனும் அதனை வீட்டுக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகள் செய்து, உறவினர்கள் முன்னிலையில் நல்லடக்கமும் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஒரு வாரத்துக்குப் பிறகு, சந்திரா படத்தை வைத்து, வீட்டில் படையல் போட்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில், இறந்ததாக நினைத்து இறுதிச் சடங்குகள் செய்த சந்திராவே உயிரோடு வீட்டுக்கு நடந்து வந்துள்ளார்.

இதையும் படிக்க வாழ்க்கைத் துணை உங்களை அதிகம் நேசிப்பதற்கு இதுதான் அறிகுறி

அவரைப் பார்த்ததும் படையல் போட வீட்டுக்கு வந்திருந்த உறவினர்கள் கடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். பிறகுதான் நடந்த உண்மை பலருக்கும் புரிந்தது. வேறொரு பெண்ணின் உடலை தனது தாயுடையது என்று மகன் தவறாக அடையாளம் காட்டியதே இவ்வளவு கூத்துக்கும் காரணம் என்று புரிந்தது.

இந்த நிலையில், இறுதிச் சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடல் யாருடையது என்ற விசாரணையில் ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இறதிச் சடங்கு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு, சந்திரா உயிரோடு திரும்பி வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT