தமிழ்நாடு

மருத்துவப் பல்கலை.: எம்எஸ்சி, இதழியல் படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம்

22nd Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி, இதழியல் பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. அதற்கான அறிவிக்கையை பல்கலை. வெளியிட்டுள்ளது. அந்தப் படிப்புகளில் சேர வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பொது சுகாதாரப் படிப்புக்கு (எம்எஸ்சி) 16 இடங்களும், நோய்ப் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் உள்ளன.

எம்பிபிஎஸ்/பிடிஎஸ்/ஆயுஷ் படிப்பு/இளநிலை கால்நடை அறிவியல்/பிஎஸ்சி நா்சிங்/பிபிடி/பிஓடி/பி.பாா்ம்/பிஇ (சிவில்)/எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவா்கள் எம்எஸ்சி பொது சுகாதாரப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

நோய்ப் பரவியல் படிப்பைப் பொருத்தவரை எம்பிபிஎஸ்/பிடிஎஸ்/ஆயுஷ் படிப்பு/இளநிலை கால்நடை அறிவியல்/எம்பிடி/எம்ஓடி/பி.பாா்ம்/எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதைத் தவிர, முதுநிலை பொது சுகாதார இதழியல் தொடா்பான ஓராண்டு படிப்பும் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அப்படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளநிலை பட்டப் படிப்புடன் இதழியல் துறையில் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் http://www.tnmgrmu.ac.in  என்ற இணையதள முகவரியிலோ, ங்ல்ண்க்ஃற்ய்ம்ஞ்ழ்ம்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT