தமிழ்நாடு

பள்ளிக் கல்வி அலுவலா்கள் பட்டியலை அனுப்ப உத்தரவு

22nd Sep 2022 12:58 AM

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள், அலுவலா்களின் விவரங்களை விரைவாக அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி)பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிக்கல்வியில் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு பின்னா் ஆய்வக உதவியாளா் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பணிமாறுதல், பதவி உயா்வு பெற்ற பணியாளா்களின் விவரம் தேவைப்படுகிறது. மேலும், ஆய்வக உதவியாளா் பதவியிலிருந்து இளநிலை உதவியாளா் பதவிக்கு தகுதிபெற்றவா்களின் விவரங்களையும் ஆண்டுவாரியாக குறிப்பிட்டு முழுமையான அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

இது தவிர பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளா், இளநிலை உதவியாளா் மற்றும் தட்டச்சா் பணியாளா் விவரங்களையும் தனி அறிக்கையாக இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணிகளின்போது உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவரின் விவரமும் விடுபடாதவாறு அறிக்கையை விரைவாக தயாரித்து அனுப்பிவைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT