தமிழ்நாடு

கோயிலுக்குச் செல்ல அரசின் ஒப்புதல் தேவையா?: கே.அண்ணாமலை கேள்வி

22nd Sep 2022 02:49 AM

ADVERTISEMENT

கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்துள்ளார்.
 திமுக ஆட்சியில் கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறைவழிபாட்டுக்குச் சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்குத் தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளைப் பறித்துள்ளனர்.
 மக்களின் அன்றாட பிரச்னைக்குத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் அரசின் நடவடிக்கையை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT