தமிழ்நாடு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து

22nd Sep 2022 02:47 AM

ADVERTISEMENT

கரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிா்த்து கடந்த 2020-ஆம் ஆண்டு திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் மீது கரூா் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் செந்தில்பாலாஜி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டது. அரசு வழிகாட்டு விதிமுறைகளை மீறவில்லை’ என்று கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சா் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT