தமிழ்நாடு

அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?

20th Sep 2022 12:54 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 5 நாள்கள் கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டமும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆச்சரியம்.. வைரஸ் வந்தால் மெசேஜ் அனுப்பும் முகக்கவசம் கண்டுபிடிப்பு!!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் நாள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேரவைத் தலைவர் அப்பாவு விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : TN Assembly
ADVERTISEMENT
ADVERTISEMENT