தமிழ்நாடு

இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் முழு கடையடைப்பு

20th Sep 2022 12:50 PM

ADVERTISEMENT

அவிநாசி: நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ.ராசாவை எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யக் கோரி, இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  போராட்டத்தில் அவிநாசி பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

திமுக பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா பொய்யான மேற்கொள்கள் மற்றும் மோசமான கருத்துக்களின் அடிப்படையில்,  தொடர்ச்சியாக இந்துக்கள் மத கலாசாரம், பண்பாடு, வழிபாடு மற்றும் கடவுள்களை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

இவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், எம்.பி பதவியில் இருந்து நீக்கக் கோரியும்  நீலகிரி தொகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக இந்து முன்னணியின் அறிவித்திருந்தனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, கூட்டணி கட்சியினர் கடைகளை அடைக்க வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் அறிவுறுத்தி வந்தனர். 

ADVERTISEMENT

இருப்பினும் நீலகிரி தொகுதிக்கு உள்பட்ட  திருப்பூர் மாவட்டம் அவிநாசி, அவிநாசி புதிய பேருந்து நிலையம், திருமுருகன்பூண்டி, சேவூர், கருவலூர், தெக்கலூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து தேனீர் கடைகள், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து முழுவதும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. 

ஏற்கனவே அவிநாசி, தெக்கலூர் உள்ளிட்ட  பகுதிகளில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு எதிர்ப்பைத் தெரிவித்தனர். மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே ஒரு சில இடங்களில் திறக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்: படக்குழு பயணம்

இதற்கிடையில் திமுகவினர் ஒருபுறம் கடைகளை திறக்கச் சொல்லி வணிகர்களிடம் அறிவுறுத்தினர்.  மேலும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT