தமிழ்நாடு

அம்பேத்கர் சட்டப் பல்கலை. வெள்ளிவிழா கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர்

20th Sep 2022 10:51 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு கல்வெட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

வெள்ளிவிழா கல்வெட்டை திறந்து வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

இதையும் படிக்க | கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் பரிமாறப்பட்ட உணவு: விடியோ வைரல்

அப்போது அவர் கூறியதாவது, 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது 4,500 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

 

1997ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தெற்காசியாவிலேயே முதல் முறையாக சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. அதுதான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரை சூட்டியதும் கருணாநிதிதான். தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் அதே பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.

சட்டப்படிப்புக்காக பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்று ஸ்டாலின் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT