தமிழ்நாடு

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு:செயலி மூலம் கண்காணிப்பு

20th Sep 2022 12:58 AM

ADVERTISEMENT

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு முறையாக விநியோகிக்கப்படுகிா? என்பது குறித்து செயலி மூலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை இத்திட்டம் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு செயல் படுத்தப்பட்டது. வடசென்னை பகுதியில் உள்ள 37 மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளில் கிச்சடி சேமியா, கேசரி வழங்கப்பட்டது.

மறுநாள் (சனிக்கிழமை) சென்னையில் அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டதால் பள்ளிகள் செயல்பட்டன. திங்கள்கிழமை 3-ஆவது நாளாக காலை சிற்றுண்டி பள்ளி குழந்தைகளுக்கு 6 சமையல் கூடங்களில் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. காலை உணவு எவ்விததாமதமும் இல்லாமல் குறித்த நேரத்தில் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தி இருப்பதால் அதனை முறையாக செயல்படுத்த மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளாா்.

‘சி.எம்.13 எப்.எஸ்.’ என்ற செயலி மூலம் அதிகாரிகள் கண்காணிக்கிறாா்கள்.

ADVERTISEMENT

அதிகாலையில் சமையல் செய்யத் தொடங்கும் நேரம், முடியும் நேரம், அங்கிருந்து வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளியில் விநியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் போன்றவற்றை இந்த செயலி மூலம் உடனுக்குடன் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரே இதனைக் கண்காணிக்கும் வகையில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது. எந்த சமையல் கூடத்தில் உணவு விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது? தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் உணவு பள்ளிகளுக்கு செல்கிா? என்பதை இதன் மூலம் கண்காணிக்கின்றனா். சரியான நேரம், தாமதம், விடுமுறை போன்ற விவரங்கள் செயலி மூலம் பெறப்படுகின்றன. தாமதம் ஏற்பட்டால் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT