தமிழ்நாடு

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இல்லை: மா. சுப்பிரமணியன்

18th Sep 2022 10:54 AM

ADVERTISEMENT

காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லையென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளிக் காய்ச்சல் உள்ளிட்ட பலவகை காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.

“அக்டோபர் முதல் வியாழக்கிழமை தோறும் பள்ளிகளில் போடப்படும். காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT