தமிழ்நாடு

பழங்குடியின தகுதி: கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதியைப் பெற்றுத் தரும் -மு.க.ஸ்டாலின்

14th Sep 2022 08:43 PM

ADVERTISEMENT


பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூக நீதியைப் பெற்றுத் தரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூக நீதியைப் பெற்றுத் தரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளிம்பு நிலையில் - அடிப்படை உரிமைகள் இன்றி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவ மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. 

படிக்கபழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ADVERTISEMENT

நரிக்குறவ மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த கடந்த மார்ச் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினேன். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாகக் கோரிக்கை எழுப்பி வந்தனர். இதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அதன் விளைவாக நரிக்குறவ மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியின தகுதி மட்டுமின்றி - எனது
தலைமையிலான அரசு அமைந்த பிறகு அவர்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

படிக்க''ஹிந்தியா அல்ல, இந்தியாதான்'': தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

அவர்களின் வாழ்விடங்களுக்குப் பட்டா வழங்குவது, அடிப்படை வசதிகள் வழங்குவது, தொழில் துவங்க உதவுவது என ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கை - நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும்.

நரிக்குறவர் இன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக திமுக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT