தமிழ்நாடு

எந்த நீதிமன்றமும் தடைவிதிக்காதபடி ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் வரும்: அமைச்சர் ரகுபதி

14th Sep 2022 01:36 PM

ADVERTISEMENT

நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டுவரப்படும். நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும்.


அதற்காக விரைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். விரைவில் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும். நீட் தேர்வு குறித்த  சட்ட மசோதாவிற்கு விரைவில் நல்ல முடிவு வரும்  என எதிர்பார்க்கிறோம். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: கடையின் பூட்டை உடைத்து ஸ்வீட், காரம் களவாடிச் சென்றவர்கள்!

பல்கலைக்கழக துணை வேந்தர்களை யார் நியமிக்க வேண்டும் என்பதை அரசின் முடிவுக்கு விட வேண்டும் என்ற சட்ட முன்வடிவுகள் ஆளுநரின் பார்வையில் உள்ளதாக  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT