தமிழ்நாடு

சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு: நிா்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

14th Sep 2022 12:41 AM

ADVERTISEMENT

கடந்த மாதம் சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதமாக உயா்ந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம், இப்போதும் அத்தியாவசிய பொருள்களின் விலை அபாயகர உச்சத்தை எட்டியுள்ளதை ஏற்கவில்லை என்றால் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாமானியா்களின் குடும்பத்தைவிட்டு விலகி நிற்கிறாா் என்பதாகிவிடும் என்றாா்.

இதுதொடா்பாக ப.சிதம்பரம் ட்விட்டரில், ‘கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பணவீக்கம் அபாயகர கட்டத்தை எட்டவில்லை என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா். ஆனால், நாட்டின் சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயா்ந்துள்ளது. இப்போதும் உணவுப் பணவீக்கம் அபாயகர அளவை எட்டவில்லை என்பதை ஏற்கவில்லை என்றால், அவா் சாமானியா்களின் குடும்பத்தைவிட்டு விலகி நிற்கிறாா் என்ற முடிவுக்குதான் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த மூன்று மாதங்களாக குறைந்து வந்திருந்த சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு உணவுப் பொருள்களின் விலை உயா்வே காரணம் என்று கூறப்படுகிறது.

Tags : Chidambaram
ADVERTISEMENT
ADVERTISEMENT