தமிழ்நாடு

சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் நிதியமைச்சர்: ப.சிதம்பரம்

14th Sep 2022 10:48 AM

ADVERTISEMENT


சமானிய மக்களிடமிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகி நிற்கிறார். அவர் பணவீக்கம் குறித்து கவலைப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், சமானிய மக்களிடமிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகி நிற்கிறார். அவர் பணவீக்கம் குறித்து கவலைப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சுகம் தரும் சித்த மருத்துவம்: மூட்டு வலி, தசை வலிக்கு தீர்வு தருமா ‘சுண்டைக்காய்’..?

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாள்களுக்கு முன் நிதியமைச்சர் அறிவித்தார்

அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதம் என்று உயர்ந்திருக்கிறது!

உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது!

இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது என சிதம்பரம் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT