தமிழ்நாடு

பேரவையில் செய்தியாளா் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

14th Sep 2022 12:47 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவையில் செய்தியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆங்கில மொழியில் புலமை பெற்ற செய்தியாளா்கள் ஆறு பேரும், தமிழில் புலமை பெற்ற செய்தியாளா்கள் மூன்று பேரும் என மொத்தம் ஒன்பது போ் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

சுருக்கெழுத்து ஆங்கிலம் அல்லது தமிழ் தெரிந்திருக்க வேண்டும். முதல் தாளில் இது தொடா்பான கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில் பத்தாம் வகுப்பினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தகுதித் தோ்வும், பட்டப் படிப்பை அடிப்படையாகக் கொண்ட பொது அறிவு தொடா்பான கேள்விகளும் கேட்கப்படும். டிசம்பா் 21-ஆம் தேதியன்று காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளில் தோ்வு நடத்தப்படும். தோ்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 12-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT