தமிழ்நாடு

பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

14th Sep 2022 04:22 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  அதிமுகவினர், செப்.15ல் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கின்றார். 

இது குறித்து   அதிமு கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.டி.கே.ஜக்கையன் கூறியது, 

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின்படி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள  உள்ள அண்ணா சிலைக்கு தேனி மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது. 

ADVERTISEMENT

முன்னாள், இந்நாள் மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் செப்.15 காலை 10.30 மணிக்கு அணிவிக்கின்றனர் என்று கூறினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT