தமிழ்நாடு

குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களுக்குத் தடை

14th Sep 2022 11:56 AM

ADVERTISEMENT

குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒல்பரப்பப்படவில்லை என்பதை தூத்துக்குடி எஸ்.பி., ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதையும், ஆபாச பாடல் இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அதிமுக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி விசாரணை

ADVERTISEMENT


குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆட தடை விதிக்கக் கோரி ராம் குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும் பாடவும் உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT