தமிழ்நாடு

கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனுக்கு எதிராக மேல்முறையீடு

14th Sep 2022 02:19 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும், தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையிலும், இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயிரிழந்த மாணவியின் தாயார், தில்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கரூ.12 லட்சம் மின் கட்டணமா..? காவலாளிக்கு அதிர்ச்சி அளித்த மின் வாரியம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT