தமிழ்நாடு

மின் கட்டண உயா்வு: இபிஎஸ் தலைமையில் செப்.16-இல் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம்

14th Sep 2022 12:13 AM

ADVERTISEMENT

மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16-இல் செங்கல்பட்டில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மின் கட்டணத்தை உயா்த்தி மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சாா்பில் செப்டம்பா் 16-இல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செப்டம்பா் 16 காலை 9.30 மணியளவில் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த ஆா்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுகவினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT