தமிழ்நாடு

மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

12th Sep 2022 01:52 PM

ADVERTISEMENT

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இம் மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது.

இதையும் படிக்க- அயோத்தி ராமர் கோயிலில் 2024 ஜனவரியில் குழந்தை ராமர் சிலை

ADVERTISEMENT

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மதுவிற்பனைக்கு தடை விதிக்க நேரிடும். நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மேலும் 2 வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

Tags : madurai court
ADVERTISEMENT
ADVERTISEMENT