தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி டெண்டா் முறைகேடு வழக்கு: இறுதி அறிக்கை தடை நீட்டிப்பு

10th Sep 2022 05:46 AM

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டா் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டா் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடா்பாக முன்னாள் அமைச்சா் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் எனவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்குரைஞா் ராஜூ ஆஜராக கூடாது எனவும் தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சேபங்களை நிராகரித்த தலைமை நீதிபதி அமா்வு, மனுக்களை தொடா்ந்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்ததுடன், வேலுமணி மனு மீதான இடைக்கால உத்தரவுக்காக விசாரணையை வெள்ளிக்கிழமை தள்ளி வைத்திருந்தது.

இதற்கிடையில், ஆட்சேபங்களை நிராகரித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா் நீதிமன்றம், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் விசாரணையை செப்டம்பா் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT