தமிழ்நாடு

ஒரு ரூபாய்க்குப் புடவை: ஜவுளிக் கடையில் அலைமோதிய பெண்கள் கூட்டம்!

10th Sep 2022 12:18 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் தனியார் ஜவுளிக் கடையில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் இன்று அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.

கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் அமைந்துள்ள தனியார் ஜவுளிக் கடையின் இன்று முதலாம் ஆண்டை முன்னிட்டு, ஜவுளிக் கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட், மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தது. 

ADVERTISEMENT

படிக்க: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது!

இதனை அடுத்து அதிகாலை முதல் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்கள், ஆண்கள், கடை திறப்பதற்கு முன்பாகவே வாசலில் காத்திருந்தனர்.

கடை திறந்த பின் அலைமோதிய கூட்டம் புடவைகளை வாங்கக் கடைக்குள் ஆர்வத்துடன் புகுந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஜவுளிக்கடை நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்கப்பட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT