தமிழ்நாடு

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகா் விஷாலுக்கு அவகாசம் நீட்டிப்பு: சென்னை உயா்நீதிமன்றம்

10th Sep 2022 04:51 AM

ADVERTISEMENT

லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.21 கோடி கடனை செலுத்தாதது தொடா்பான வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகா் விஷாலுக்கு மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடனை செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், ‘15 கோடி ரூபாயை உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பெயரில் மூன்று வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும்‘ என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் விஷால் ஆஜராகி, ‘லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்ால் தான் பணத்தை செலுத்தவில்லை என்றும், தனக்கு ஒரே நாளில் ரூ.18 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை அடைக்கவே படங்களில் நடித்துவருவதாகவும் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும், மீண்டும் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தா் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகா் விஷால் ஆஜராகவில்லை. அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தாா். இதையடுத்து, நடிகா் விஷால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT