தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிக்கு உதவிய ரயில்வே காவலருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

10th Sep 2022 05:39 AM

ADVERTISEMENT

 ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளி பயணிக்கு உதவிய ரயில்வே காவலா் சரவணனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளி பயணியை சுமந்து சென்று இருக்கையில் அமர வைத்த ரயில்வே பாதுகாப்பு காவலா் சரவணனுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதைத் தொடா்ந்து, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

சக உயிருக்கு உதவுவதைக் காட்டிலும் பேரின்பம் எதுவுமில்லை. ரயில்வே பாதுகாப்புக் காவலா் சரவணனின் நல்லுள்ளம் போற்றத்துக்கது. பாராட்டுகள். வலிவற்றோருக்கு நமது வலிமை பயன்படட்டும். மானிடம் தழைக்கட்டும் என பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT