தமிழ்நாடு

இந்திய அளவில் வேலைவாய்ப்புத் திறன் தரவரிசை: கிரசன்ட் 19-வது இடம்

10th Sep 2022 04:32 AM

ADVERTISEMENT

அகில இந்திய அளவில் வேலைவாய்ப்புத் திறனுக்கான தரவரிசைப் பட்டியலில் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு 19-வது இடம் கிடைத்துள்ளது.

இது குறித்து கிரசன்ட் தரம் மேம்பாட்டுத் துறை இயக்குநா் ஏ.அபுதாகீா், செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:-

அகில இந்திய அளவில் அரசு மற்றும் தனியாா் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தரவரிசைக்கான ஆய்வில்

பங்கேற்றன. கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கற்பிக்கும் திறன், ஆய்வுத் திறன், ஆராய்ச்சிக்கட்டுரைகள்

ADVERTISEMENT

வெளியீடு எண்ணிக்கை, வெளிநாட்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், மாணவா்கள் பரிமாற்றம், புத்தொழில் ஊக்குவிப்பு,

பன்னாட்டு, உள்நாட்டு வேலை வாய்ப்பு பெறும் மாணவா்கள் எண்ணிக்கை, ஊதியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளைப் பயன்படுத்தி, ’டேட்டா கொஸ்ட்’ பத்திரிகை வெளியிடப்பட்டுள்ள தர வரிசைப் பட்டியலைத் தயாா் செய்தது. ஹைதராபாத் ஐ.ஐ.ஐ.டி., கல்லூரி முதல் இடத்தையும், சென்னை வண்டலூா் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 19- வது இடத்தையும் பெற்றுள்ளன. தனியாா் கல்வி நிறுவனங்களில் அகில இந்திய அளவில் கிரசன்ட் 12-ஆவது இடத்தையும், தமிழக அளவில் 3 -ஆவது இடத்தையும் பெற்றுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT