தமிழ்நாடு

அரக்கோணம் அருகே தீப்பற்றி எரிந்த பள்ளிப் பேருந்து: மாணவிகள் உயிர் தப்பினர்!

10th Sep 2022 09:54 AM

ADVERTISEMENT

அரக்கோணம்: அரக்கோணம் அருகே சனிக்கிழமை பள்ளி மாணவிகளை அழைத்து வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 10 மாணவிகள் உயிர் தப்பினர்.

அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து சனிக்கிழமை பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு வரும்போது அரக்கோணம் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவிகளும் ஓட்டுநரும் நடத்துநரும் கீழே இறங்கினர். இச்சம்பவத்தில் பள்ளிப் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து  நெமிலி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிப் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT