தமிழ்நாடு

திருச்சி காவிரி பாலம் நாளை முதல் மூடல்

9th Sep 2022 08:55 AM

ADVERTISEMENT

பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி காவிரி பாலம் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது. 

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செப்டம்பர் 10) நள்ளிரவு 12 மணி முதல் காவிரி பாலம் மூடப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 

திருச்சி - சென்னை செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலை சென்று காவிரி புதுப் பாலம் வழியாக செல்லலாம் எனவும் அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை சென்று திருச்சி அடையலாம் எனவும் போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள், அண்ணா சிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம். 

ADVERTISEMENT

பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் வழக்கம்போல காவிரி பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT