தமிழ்நாடு

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா

9th Sep 2022 11:46 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 40 ஆம் ஆண்டு திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டு எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 40 ஆம் ஆண்டு திருவிழா. 29-08-2022 அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

அதனைத் தொடர்ந்து லூர்தம்மாள் லூர்து அன்னை ஆலயம் ஆலய பங்குத் தந்தை அருள்திரு. அன்றனி புருனோ தலைமையில், நூற்றாண்டு விழாக்குழு தலைவர் அருள்பணி. ஜேம்ஸ் விக்டர், அருள்திரு. மார்ட்டின் திருவிழாத் திருப்பலியை சிறப்பித்தனர்.

ADVERTISEMENT

பின்னர் கேக் வெட்டி வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

விழா ஏற்பாட்டினை தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT