மன்னார்குடியிலிருந்து தஞ்சை திரும்பும் வழியில் அதிமுகவின் வைத்திலிங்கம், சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
மன்னார்குடியிலிருந்து தஞ்சை திரும்பும் வழியில், தஞ்சாவூர் மாவட்டம் ஓவல்குடி என்ற பகுதியில் யதார்த்தமாக சசிகலாவின் வாகனத்தைப் பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் தனது வாகனத்திலிருந்து இறங்கி வந்து சசிகலாவிற்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் சசிகலா வாகனத்திலிருந்து இறங்கி அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.
மேலும், வைத்தியலிங்கம் இன்று தனக்கு பிறந்தநாள் என்று சசிகலாவிடம் தெரிவித்தார். உடனடியாக சசிகலா இனிப்பு வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிக்க | 'ஒற்றுமை தேவை' - சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின் வைத்திலிங்கம் பேட்டி
சசிகலாவுடன் வைத்தியலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிக்க | பூங்காவை இடித்து தன் வீட்டுக்குச் சாலை போட முயற்சி செய்த திமுக கவுன்சிலர்