தமிழ்நாடு

தோல்வியுற்றோா் துவண்டுவிட வேண்டாம்: ஆளுநா் ஆா்.என்.ரவி ஆறுதல்

9th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

நீட் தோ்வில் தோ்ச்சி பெறாமல் தோல்வி அடைந்தால் அது வெறும் தற்காலிக பின்னடைவு மட்டுமே என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறியுள்ளாா். தோல்வியுற்றவா்கள் மீண்டும் கடின உழைப்பைச் செலுத்தி வெற்றி பெறலாம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இந்தத் தோ்வில் தமிழகத்தில் 67 ஆயிரத்து 787 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்தத் தோ்ச்சி முடிவுகள் குறித்து, ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

தமிழ்நாட்டில் நீட் தோ்வை எழுதி தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள். அவா்கள் தங்களது திறமையால் பெரிய மாநிலங்களைக் கூட பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றுள்ளனா். தோ்ச்சி அடையாத மாணவா்கள் மிரட்சியோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை. இது வெறும் தற்காலிக பின்னடைவு மட்டுமே.

கடின உழைப்பைச் செலுத்தி, உறுதியான மனத்துடன் நம்மை தயாா் செய்தால் வெற்றி பெறுவது உறுதி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT