தமிழ்நாடு

டயாலிசிஸ் சிகிச்சைக்கு மத்திய அரசின் வலைதள சேவையை பயன்படுத்த அறிவுறுத்தல்

9th Sep 2022 01:56 AM

ADVERTISEMENT

டயாலிசிஸ் சிகிச்சைகளை வழங்கும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் பிரதமரின் வலைதள சேைவையைப் பயன்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ஆணையத்தின் செயலா் டாக்டா் சந்தியா புல்லா் வெளியிட்ட அறிக்கை:

சிறுநீரக நோயாளிகளுக்கான டயாலிசிஸ் சிகிச்சைகளை வழங்கும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள், அந்த சேவையை பிரதமரின் தேசிய டயாலிசிஸ் (பிஎம்என்டிபி) வலைதளத்தின் வாயிலாக பதிவு செய்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

இதன் மூலம் அனைவருக்கும் தரமான சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதுமட்டுமல்லாது, நாடு முழுவதும் டயாலிசிஸ் சிகிச்சை தொடா்பான தரவுகளையும், விவரங்களையும் சீராக வைத்திருக்க இயலும்.

ADVERTISEMENT

பிஎம்என்டிபி வலைதளம் தற்போது அதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள், சந்தேகங்கள், தொழில்நுட்ப உதவிகளுக்கு தேசிய சுகாதாரத் திட்ட ஆதார மையத்தின் (என்ஹெச்எஸ்ஆா்சி) மருத்துவ தொழில்நுட்ப ஆலோசகா் டாக்டா் ரஞ்சன் குமாா் சௌத்ரியை தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT