தமிழ்நாடு

கனல் கண்ணனின் ஜாமீன் நிபந்தனையை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

9th Sep 2022 06:45 PM

ADVERTISEMENT

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமீன் நிபந்தனையை நாளை முதல் செப்.17 வரை நிறுத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

படப்பிடிப்புக்காக கேரளம் செல்வதால் ஜாமீன் நிபந்தனையை நிறுத்திவைக்கக்கோரிய கனல்கண்ணனின் மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பு சாா்பில் சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு

இதில், பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலைப் பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் எதிரே உள்ள பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதாகக் கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இதுதொடா்பாக தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் மாவட்டச் செயலா் குமரன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு சைபா் க்ரைம் போலீஸாா் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்தனா்.

இந்த வழக்கில் கனல் கண்ணன் ஜாமீன்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன் 4 வாரங்களுக்கு இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT