தமிழ்நாடு

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு வரும் வழியில் விபத்து: 3 பேர் பலி (விடியோ)

9th Sep 2022 09:54 AM

ADVERTISEMENT

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு வரும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் பலியாகினர். 

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன்(18) தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில்(Suzuki Iszusu) நண்பர்களுடன் வந்து கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டது. 

தென்னமநல்லூர் பகுதியில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த கார், மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு சுமார் 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் கதவை திறந்து வெளியே விழுந்துவிட உடன் வந்த நண்பர்கள் ஆதர்ஷ்(18), விவேக்பாபு(18), நந்தனன்(18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்றவர்கள்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் காரையும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT