தமிழ்நாடு

ரயில்வே காவலர் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

9th Sep 2022 08:41 PM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிக்கு உதவிய ரயில்வே பாதுகாப்புக் காவலர் சரவணனின் நல்லுள்ளம் போற்றத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.  

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,  சக உயிர்க்கு உதவுவதைக் காட்டிலும் பேரின்பம் எதுவுமில்லை!
இரயில்வே பாதுகாப்புக் காவலர் சரவணனின் நல்லுள்ளம் போற்றத்தக்கது! பாராட்டுகள்!
வலிவற்றோருக்கு நமது வலிமை பயன்படட்டும்! மானிடம் தழைக்கட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க- 100 நாள் வெற்றியில் விக்ரம் திரைப்படம்

விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளி பயணி ஒருவரை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் சரவணன் ரயில் பெட்டியினுள் இருக்கை வரை தூக்கிச் சென்று அமரவைத்தார். இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.  

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT