தமிழ்நாடு

நடிகர் விஷாலுக்கு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம்

9th Sep 2022 01:41 PM

ADVERTISEMENT

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய  நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரம் அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

விஷால் ஆஜராகாத நிலையில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட அவரின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது.

நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.  லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.21 கோடி கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் விஷால் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் செலுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. ஒரே நாளில் ரூ.18 கோடி நஷ்டம் ஆன நிலையில், 6 மாதங்கள் ஆனாலும் பணத்தை செலுத்த முடியாது என விஷால் தரப்பு வாதம் செய்ததது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: தக்காளி விலையில் மாற்றம்

இந்நிலையில், நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரம் அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT