தமிழ்நாடு

வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

7th Sep 2022 02:26 PM

ADVERTISEMENT

வைகை அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய் ஒரு போக பாசனப் பரப்புகளுக்கு புதன்கிழமை விநாடிக்கு 1,130 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசனப் பரப்பு, திருமங்கலம் பிரதானக் கால்வாய் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்புகளுக்கு 120 நாட்கள் வரை தண்ணீர் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, அணையிலிருந்து விநாடிக்கு 1,130 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் , சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அணையிலிருந்து இன்று(புதன்கிழமை) முதல் 45 நாட்களுக்கு முழுமையாவும், அதைத் தொடர்ந்து 75 நாட்களுக்கு முறைப்பாசன அடிப்படையிலும், 120 நாட்களுக்கு மொத்தம் 8,461 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதன்மூலம் மதுரை, திண்டுகல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒரு போக நிலங்கள், திருமங்கலம் பிரதானக் கால்வாய்  கீழ் உள்ள 19 ஆயிரத்து 439 ஏக்கர் ஒரு போக நிலங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து, 5,002 ஏக்கர் ஒரு போக நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT