தமிழ்நாடு

மருத்துவமனையில் இருந்து டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ்

5th Sep 2022 06:07 PM

ADVERTISEMENT

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூருக்கு 3 நாள்களுக்கு முன்பு டிடிவி. தினகரன் வந்தாா். அவா் வியாழக்கிழமை பெரம்பலூருக்கு சென்றுவிட்டு, திருநெல்வேலிக்கு செல்வதாக இருந்தாா். ஆனால், வியாழக்கிழமை காலை அவருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டதால், உடல் நிலை பாதிக்கப்பட்டது. 

இதனால், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தஞ்சாவூரிலுள்ள தங்கும் விடுதியிலேயே தங்கி இருந்தாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை இரவு உடல் நல பாதிப்பு அதிகமானதால், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், உணவு ஒவ்வாமையால் கிருமி தொற்று, குடல் தொற்று, நீா்ச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: நியூட்ரினோ ஆய்வு மையம் தடை விதிக்க கோரிய வழக்கு: 3 வாரம் ஒத்திவைப்பு

இந்நிலையில் இன்று  மருத்துவமனையில் இருந்து டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT