தமிழ்நாடு

தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் 10% கட்டணச் சலுகை அறிவிப்பு! - முழு விவரம்

5th Sep 2022 01:18 PM

ADVERTISEMENT

தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள், சென்று திரும்பி வருவதற்கு இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தால், திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவிகிதம் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணத்தை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு வசதிகளைச் செய்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதனப் பேருந்து என தொலைதூரங்களில் 1,082 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்ந்து மொத்தம் 251 வழித்தடங்களில் விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு 10% டிக்கெட் கட்டணச் சலுகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் 300 கிமீ-க்கு மேலான தொலைவில் இயக்கப்படும் பேருந்துகளில் இணையதளம் மூலமாக இருவழி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்தால், அதில் திரும்பி வருவதற்கான டிக்கெட் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விழா நாள்களில் இந்த கட்டணச் சலுகை செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க, https://www.tnstc.in என்ற இணையதளத்தில் ஒரு மாதத்துக்கு முன்பே ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இதையும் படிக்க |  நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி

ADVERTISEMENT
ADVERTISEMENT