தமிழ்நாடு

சட்டப் பேரவை: பத்து ஆண்டு விவாதங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

31st Oct 2022 12:59 AM

ADVERTISEMENT

தமிழக சட்டப் பேரவைக்கான இணையதளத்தில் இதுவரை பத்து ஆண்டுகளுக்கான விவாதக் குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1921-ஆம் ஆண்டில் இருந்து பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் பதிவேற்றம் செய்ய பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப் பேரவை முழுமையாக காகிதமில்லாத அவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரவைக்குள் தொடுதிரை வசதியுடன் கணினி அளிக்கப்பட்டுள்ளதுடன், காகிதங்கள் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டப் பேரவையின் இணையதளத்தையும் (www.tnassembly.tn.gov.in) இளைய சமுதாயத்தினா் அதிகம் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பேரவையில் நடைபெறும் நடவடிக்கைக் குறிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

புத்தகங்களாக பாா்க்கலாம்: பேரவையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தும், பேரவை நடவடிக்கைக் குறிப்புகள் என்ற பெயரில் புத்தகங்களாக அச்சிடப்படும். இந்தப் புத்தகங்களை எழுதுபொருள் அச்சுத் துறையிடம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். முழுமையாக சரிபாா்க்கப்பட்டு, பிழைகள் திருத்தப்பட்ட பிறகே புத்தகங்களாக அச்சிடப்படுகின்றன.

இந்தப் புத்தகங்கள் அப்படியே, சட்டப் பேரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி முதல் இப்போது வரையிலான பேரவை நடவடிக்கைக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் பேரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

குறிப்பாக, ஆளுநா் உரையின் மீதான விவாதங்கள், நிதிநிலை அறிக்கை, துறைவாரியான மானியக் கோரிக்கைகள் என அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் கூறியது:-

பேரவை நடவடிக்கைகள் அனைத்தையும் கணினிமயமாக்க தனி நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிதிகளைப் பயன்படுத்தியே பேரவை இணையதளம் நவீனமயமாக்கப்பட்டுள்ளதுடன், பேரவை நடவடிக்கைக் குறிப்புகள் அனைத்தும் எண்மமயமாக்கப்பட்டு வருகின்றன. 1921-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு

கண்டுள்ளது. 100 ஆண்டுகள் பேரவையில் நடந்த விவாதங்கள் அனைத்தையும் கணினிமயமாக்கி வருகிறோம். அதன்படி இதுவரையில் பேரவையில் 10 ஆண்டுகள் நடந்த விவாதங்கள் அனைத்தும் புத்தகங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பேரவை விவாதக் குறிப்புகள் அனைத்தையும் பதிவேற்றம் செய்யும் பணிகள் விரைவில் நிறைவடையும் என்று பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT