தமிழ்நாடு

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை!

29th Oct 2022 12:12 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், ஆந்திரத்திலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. 

கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை அக் 25-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்தாண்டு சற்று தாமதமாக அக்.29-ம் தேதி தொடங்கியுள்ளது. 

ADVERTISEMENT

படிக்க: ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கடந்த 2 ஆண்டுகளாக இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவானதாகவும், இந்தாண்டு இயல்பை ஒட்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அக்.31, நவ.1 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT