தமிழ்நாடு

24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வட தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

29th Oct 2022 10:05 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மற்றும் ஒடிசாவிலும் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 4 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பருவமழை தொடக்கம் காரணமாக, நவம்பர் 1, 2 தேதிகளில் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் நெல்லூர் முதல் கடலூர் வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. 

ADVERTISEMENT

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, இன்று (சனிக்கிழமை)  தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ADVERTISEMENT
ADVERTISEMENT