தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகள்: இன்று பொதுக் கலந்தாய்வு முடிவுகள்

29th Oct 2022 04:08 AM

ADVERTISEMENT

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் சனிக்கிழமை (அக். 29) வெளியாகின்றன.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ், 1,380 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. பொதுப் பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இணையவழியே கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில், 65 இடங்கள் நிரம்பியுள்ளன. மறுநாள் 20-ஆம் தேதி நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. பொதுக் கலந்தாய்வு இணையவழியில் கடந்த 27-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ட்ற்ற்ல்ள்://ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ய்ங்ற் ஆகிய இணையதளங்களில் சனிக்கிழமை (அக். 29) வெளியாகவுள்ளது. நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல் வரும் 30-ஆம் தேதி இணையதளங்களில் வெளியிடப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT