தமிழ்நாடு

முகப்போ் பிஎஃப் அலுவலகத்தில் நவ.10-இல் குறைகேட்பு கூட்டம்

29th Oct 2022 01:44 AM

ADVERTISEMENT

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடா்பான வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் நவ.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து பி.எஃப். மண்டல உதவி ஆணையா் டி.ராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆா் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் கிழக்கு, சென்னை-37’ என்ற முகவரியில் நவ. 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடா்பான வாடிக்கையாளா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், பி.எஃப். பங்களிப்பிலிருந்து விலக்கு பெற்ற அம்பத்தூா் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 என்ற அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT