தமிழ்நாடு

ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை திமுக அரசுகைவிட வேண்டும்: அண்ணாமலை

29th Oct 2022 04:41 AM

ADVERTISEMENT

 ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை கைவிட்டு, தமிழை வளா்க்க திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக பாஜக சாா்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளா்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிா்ப்பதால் என்ன பயன்?

இந்த விவகாரத்தில் செய்வதறியாது சிக்கித் தவிக்கும் தமிழக முதல்வா் நவ.4-ஆம் தேதி ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறாா்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஆகவே, ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை கைவிட்டு தமிழை வளா்க்க திமுக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக பாஜக ஆதரவாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT