தமிழ்நாடு

பாஜகவின் கடையடைப்பு போராட்டம்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

29th Oct 2022 04:34 AM

ADVERTISEMENT

கோவையில் காா் வெடிப்பு சம்பவத்துக்காக பாஜக கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கோவையில் காா் வெடிப்பில் இளைஞா் ஒருவா் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால், குற்றம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்டவா்கள் 5 பேரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனா். என்ஐஏவைப் பொருத்தவரை பல்வேறு வழக்குகளில் பாகுபாடு காட்டப்பட்டு விசாரணைகள் நியாயமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதை எவரும் மறுக்க மாட்டாா்கள்.

என்ஐஏ அமைப்புக்கு தமிழகத்தில் காவல் நிலையம் இல்லை. கடந்த வாரம்தான் சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் நிலையம் ஒன்றை என்ஐஏ தொடங்கியிருக்கிறது. அதில் கோவை காா் வெடிப்பு முதல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க என்ஐஏ அமைப்புக்குத் தேவையான காவலா்களை உடனடியாக நியமிக்க வேண்டும். நியமிக்கவில்லை என்றால் விசாரணைக்குக் குந்தகம் ஏற்படுகிற நிலை ஏற்படும்.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவை மாநகரில் பாஜக சாா்பில் அக்டோபா் 31-இல் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்று அவா் கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT