தமிழ்நாடு

கோவையில் பாஜகவின் முழு அடைப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: காரணம் என்ன?

29th Oct 2022 03:59 PM

ADVERTISEMENT

அக்.31-ம் தேதி நடைபெற இருந்த முழு அடைப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக  கோவை மாநகர பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலை ஏற்று முழு அடைப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளிடம் இருந்து கோவையைக் காக்க வலியுறுத்தி பாஜக, ஹிந்து அமைப்புகள் சாா்பில் அக்டோபா் 31ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடக்க உள்ளதாக பாஜகவினா் தெரிவித்தனர்.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாஜக முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை கோவையில் புதன்கிழமை(அக்.27) சந்தித்தனா். 

ADVERTISEMENT

அப்போது அவர்கள், பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலைதூக்கியுள்ளது என்பதை இந்த காா் வெடி விபத்து உணா்த்துகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும் கோவையைக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அக்டோபா் 31ஆம் தேதி முழு அடைப்புக்கு பாஜக மற்றும் ஹிந்து முன்னணி அழைப்பு விடுக்கிறது. எல்லா இஸ்லாமியா்களையும் பயங்கரவாதிகள் என நாங்கள் கூறவில்லை. 

அமைதியை விரும்பும் அனைத்து இஸ்லாமிய ஜமாத்துகளும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றனா்.

தமிழக அரசை கண்டித்து பாஜக அறிவித்துள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு  தடைவிதிக்கக்கோரி கோவை தொழிலதிபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த பாஜக மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை என்றும், கட்சி நிர்வாகிகள்  அறிவித்த அறிவிப்பை மாநிலத் தலைவர் அண்ணாமலை அங்கீகரிக்கவில்லை என்றும் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க: விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

இந்நிலையில்,  கோவையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றுக் கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT