தமிழ்நாடு

கோவை சம்பவம்: பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக் கூடாது-செந்தில் பாலாஜி

27th Oct 2022 12:01 PM

ADVERTISEMENT


கோவை சம்பவத்தில் பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக் கூடாது என்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

நூல் விலை உயர்வுக்கு போராட்டம் அறிவிக்காத பாஜக, தற்போது கோவை சம்பவத்துக்காக போராட்டம் நடத்துகிறது என்றும் கோவையில் வெடி விபத்து சம்பவத்துக்குப் பிறகும் அமைதியாக இருக்கும் நிலையில், பந்த் அறிவிப்பு வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயல்வதாகவும்  அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க.. ஏன் குரங்குகளைப் போல தாவி வருகிறீர்கள்? செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை (விடியோ)

கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பாஜக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்த போது, பிரதமர் நரேந்திர மோடி அது பற்றி எத்தனை முறை பேசியுள்ளார்.
கோவை மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கவில்லை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கோவையில் 3 மணி நேரம் தொழில்முனைவோர்களை சந்தித்துப் பேசினார். 

மாநிலம் கடந்தும் விசாரணை தேவைப்படும் என்பதால் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டார்.

கட்சியை வளர்ப்பதற்காக, பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடபடக் கூடாது. கோவையில் காரில் வெடிகுண்டு வெடிக்கப்படவில்லை. மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டாம். மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்தன் மூலம்தான் ஒரு மாநிலத்தில் கட்சியை வளர்க்க முயும். அதைவிடுத்து, பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT