தமிழ்நாடு

பட்டா கோரி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை!

26th Oct 2022 01:25 PM

ADVERTISEMENT

 

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரியும், 100 நாள் வேலையை முறையாக வழங்கக் கோரியும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஜோதி, மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், ஏழுமலை முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன், வட்ட செயலாளர் சிவக்குமார் கண்டன உரையாற்றினர்.

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தில் பன்பாக்கம், அப்பாவரம்,ராஜாபாளையம், அரியத்துறை, நத்தம், திருப்பேடு, மேல்முதலம்பேடு, போரூர் புதுநகர், சிறுபுழல்பேட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டது.

அவ்வாறே 100 நாள்  வேலையைத் தொடர்ச்சியாகத் தர வலியுறுத்தியும், ரூ.281 கூலியைத் தர வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினரிடம் வட்டாட்சியர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT