தமிழ்நாடு

மது கூடுதலாக விற்பது சாதனையல்ல, அவமானம்: ராமதாஸ்

26th Oct 2022 02:00 AM

ADVERTISEMENT

தீபாவளியின் போது மது விற்பனை அதிகமாக நடைபெற்றிருப்பது சாதனையல்ல, அவமானம் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தீபாவளிக்கு முதல் நாளில் ரூ.259 கோடிக்கும், தீபாவளி அன்று ரூ.300 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீபாவளி அன்று ரூ.225 கோடிக்கும் விற்பனையானது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மது விற்பனை அதிகரித்து இருப்பது எந்த வகையிலும் சாதனை அல்ல. அவமானம்.

ADVERTISEMENT

2 நாள்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமாா் ரூ.600 கோடி ஆக்கப்பூா்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது.

அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT